தல அஜித்தை பற்றி ரசிகர்களிடம் புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்.! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் வீடியோ காணொளி இதோ.!

ajith
ajith

தனது சினிமா பயணத்தில் பல பிரபலங்களும் தல அஜித்தை பாராட்டி பல தகவல்களை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்கள் அந்த வகையில் பார்த்தால் தல அஜித் சினிமாவையும் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து தருவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் கூடிய சீக்கிரம் மக்கள் மத்தியில் வெளியாகியது இல்லை.

தல அஜித் நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது அதனைத்தொடர்ந்து தல அஜித் தற்பொழுது நிறைய விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இவர் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்ப்பார் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை இதனை பற்றி ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இந்நிலையில் தல அஜித்தை பற்றி பல விஷயங்களை ரசிகர்களுக்கு நடிகர் பார்த்திபன் கூறியுள்ள வீடியோ காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பல ரசிகர்களும் பிரபலங்களைப் பற்றிய கேள்விகள் கேட்கும் பொழுது பலரும் பதிலளித்து வருவார்கள் அதேபோல் பார்த்திபனின் ரசிகர் ஒருவர் தல அஜித்தை பற்றி கூறுங்கள் என கேட்ட பொழுது அவர் உடனே கெத்து போன்ற கதைகள் யோசித்தால் அது நண்பர் அஜித் ஞாபகம் தான் வரும்.

ரொம்ப பவர்ஃபுல்லான நடிகர் அவரது பெயரைச் சொல்லும் பொழுது அரங்கில் விசில் மற்றும் கைத்தட்டல் சத்தம் நிற்கவே சில நிமிடங்கள் ஆகி விடும் என தல அஜித்தை பற்றி கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது போன்ற பல விஷயங்களை கூறிய வீடியோ காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.