தமிழ் திரையுலகில் தனது கதை அபூர்வமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தானே இயக்கிய தானே நடித்து வரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனர் தான் பார்த்திபன் இவர் 90ன் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பூஜை போட்டு பல திரைப்படங்கள் கைவிடப்பட்டது அந்த திரைப்படங்களைப் பற்றி தற்பொழுது நாம் பார்ப்போம்.
ஏலேலோ:பார்த்திபன் கனவு திரைப்படமாக இருந்த ஏலேலோ கிராமத்தில் செட் போட்டு நடைபெற்றது இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்புக் கொண்டார் ஆனால் என்ன காரணங்கள் என்பது தெரியவில்லை திடீரென்று படம் வெளியாகாமல் போய்விட்டது.
காங்கேயம் காளை:இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் ரவளி என்ற நடிகை அப்போது ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி இருந்ததால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமானது திடீரென்று காளையையும் அவரையும் நீக்கிவிட்டு போஸ்டரில் போட்டதால் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டே போனது அதுவும் ஒரு சில காரணங்கள் குறித்து நிறுத்தப்பட்டது.
சீம பசு:இந்த திரைப்படத்திற்கு நன்றாக பூஜை நடைபெற்று சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இதில் நடிக்கிறார்கள் என தகவல் அதிகார பூர்வமாக வெளியானது ஆனால் திடீரென்று என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை ஒரு சில காரணங்கள் குறித்து இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் முடங்கி விட்டது.
சோத்துக்கட்சி:இந்த திரைப்படத்தை பார்த்திபன் அரசியலில் ஏமாற்றுவது மற்றும் நய்யாண்டி கலந்த காமெடி கதையாக எடுக்க ஆரம்பித்தார் அரசியலை விமர்சிக்கும் வகையில் படம் எடுக்க ஆரம்பித்தது இந்தப் படம் பல சர்ச்சைகளை குறித்து பார்த்திபனால் எடுக்க முடியாமல் போய்விட்டது.
மேலும் பார்திபன் கதையில் இன்னும் எத்தனை திரைப்படங்கள் இருப்பது என்பது நமக்கு தெரியவில்லை இதே போன்ற பல இயக்குனர்களின் அபூர்வமான திரைப் படங்கள் வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது என்று தான் கூற வேண்டும்.ஆனால் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக பார்த்திபன் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.