தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர் என்றால் அது பார்த்திபன் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல் திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கும் இந்த திரைப்படம் ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகர் பார்த்திபன் எந்த ஒரு கதையும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார் அதேபோல ஒரே மனிதரைக் காட்டி ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கொடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ள திரைப்படம் என்றால் அது இரவின் நிழல் திரைப்படம் தான்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பார்த்திபன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார் அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் அவர்கள் புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்ய நேரிட்டாலோ அல்லது இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்தாலோ அதில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த திரைப்படத்திற்கு சரியான ஆள் என்றால் அது சிம்பு தான் அதுமட்டுமில்லாமல் இது குறித்து நான் கலைப்புலி தான் சாரிடம் பேசி உள்ளேன் அவரும் நீ படத்தை எடு தயாரிக்க நான் ரெடி என்று கூறியது மட்டும் இல்லாமல் சிம்புவும் இதற்கு ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிம்பு வாயிலிருந்து ஓகே என வார்த்தை வந்தவுடன் ஷூட்டிங் கிளம்ப வேண்டியது தான் என பார்த்திபன் கூறி உள்ளார். அது மட்டும் இல்லாமல் புதிய பாதை திரைப்படத்தை அப்படியே எடுக்க முடியாது அதில் சில மாற்றங்களையும் செய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.