Actor Parthiban : இளையராஜா காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் குறித்து பார்த்திபன் பேட்டி. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பார்த்திபன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி இரவின் நிழல் என்ற படத்தில் இயக்கி நடித்து அசதி இருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் தனது குசும்பு தனமான பேச்சினாலும் வித்தியாசமான முயற்சியினாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் பார்த்திபன் நடிகர் இயக்குனராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். அதன்படி 15 படங்களை இயக்கியும், 13 படங்களை தயாரித்தும், 70கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு வித்தியாசமான கருத்தை தந்துள்ளது அதன்படி பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பேசும் பொருளானது மேலும் தேசிய விருது மற்றும் பல உயர் விருதுகளையும் தட்டி சென்றது. இவ்வாறு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் பார்த்திபன் 1984ஆம் ஆண்டு இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
அதன்படி ஐந்து வருடங்கள் கழித்து 1989ஆம் ஆண்டு புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடிக்க தேசிய விருதையும் வென்றது. புதியபாதை படத்திற்கு முன்பு ஒரு படத்தினை இயக்கியுள்ளார் ஆனால் அந்த படம் குறித்து யாருக்கும் கடைசிவரை தெரியாமல் போகி உள்ளது அது குறித்து பார்த்திபனை பேட்டி அளித்துள்ளார்.
அதாவது புதியபாதை படத்திற்கு முன் ஒரு படத்தை இயக்க இருந்தாராம் பார்த்திபன் அப்பொழுது தனது குருநாதரான பாக்யராஜ் இடம் இது குறித்து கூறியுள்ளார் அப்பொழுது பாக்கியராஜ் இசையமைப்பாளராக உருவெடுத்த காலம் அது. பாக்யராஜ் சரி அந்த படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று கூறினாராம் அப்பொழுது இருந்த புதுமுக இயக்குனர்கள் அனைவருமே தங்களது முதல் படத்தில் இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பார்களாம்.
அதே போல் பார்த்திபனும் முடிவெடுத்து இருக்கிறார் தயக்கத்துடன் பாரதிராஜாவிடம் கூற சரி முதலில் அவரிடம் சென்று கேள் என கூறினாராம். பழனிச்சாமி என்பவர் உடன் நேராக இளையராஜாவை பார்க்க சென்ற பார்த்திபன் அவர் காலில் விழுந்து வணங்கி இளையராஜாவிடம் தனது முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்பொழுது இளையராஜா வெளிய போங்க பாக்கியராஜ் தான் இசையமைப்பாளராக மாறிவிட்டார்ல நீயும் போய் ஆர்மோனிய பெட்டி வாங்கி வாசி என்றாராம். அவர் பாக்யராஜின் மேல் கோபத்தில் இருந்தாராம் பாக்யராஜின் துணை இயக்குனர்கள் யாருக்குமே இசையமைக்க கூடாது என்ற முடிவுடன் இளையராஜா இருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு இளையராஜா கூறிய பிறகும் காலில் விழுந்து பார்த்திபன் கெஞ்சினாராம் இருந்தாலும் திட்டவட்டமாக நோ சொல்லி அனுப்பி விட்டாராம். பாக்யராஜ் பார்த்திபனிடம் நான் சொன்னேன் அவர் பண்ண மாட்டாரு எனக்கூறி பிறகு அந்த படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்து தந்துள்ளார் ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்றுள்ளது.