இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பலவிதமான சாதனைகளை படைத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகிய நிலையில் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், என பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு வரலாற்று கதை என்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்தார்கள் அந்த நம்பிக்கையை தளர்த்த விடாமல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகிறது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்படுகிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது டப்பிங் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது அதனால் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் டப்பிங் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் அவர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இதனால் விரைவில் பொன்னியின் இரண்டாம் பாகத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் செம வைரலானது இதனை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக பார்த்திபன் அவர்கள் தனது titter பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த உர்ச்சாகத்தில் இருக்கிறார்கள்.