தனது பாணியில் ஐஸ்வர்யா ராய் அவர்களை வரிகளால் வர்ணித்த பார்த்திபன்.! எப்படி வர்ணித்துள்ளார் பார்த்தீர்களா

parthipan
parthipan

நடிகராகவும் இயக்குனராகவும் கதாசிரியராகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் பார்த்திபன் இவர் ஐஸ்வர்யா ராய் அவர்களை தன்னுடைய கவிதைகளால் வர்ணித்துள்ளது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில்  விக்ரம், பார்த்திபன், சரத்குமார், கார்த்தி, பிரபு,  சத்யராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு,  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்தத் திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிரமோஷன் செய்து வருகிறார்கள். இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் நட்சத்திர பிரபலங்கள் என கலந்துகொண்டு செல்பி எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

இநிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து பார்த்திபன் மற்றும் சரத்குமார் இருவருடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்கள் இந்த புகைப்படத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தனது கவிதைகளின் மூலம் ஐஸ்வர்யா ராய் அவர்களை வருணித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது.

ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும்  முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்

அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்
தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.

என மிகவும் அழகாக கவிதைகளின் மூலம் வர்ணித்துள்ளார் இந்த பதிவு ரசிகர்களுடைய வைரலாகி வருகிறது.