தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்குபவர் நடிகர் சுந்தர் சி. பொதுவாகவே இவருடைய திரைப்படங்களில் ஆக்சன் கலந்த காமெடியாகவே முழு கதையையும் கொண்டு செல்வார். அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்கிய அரண்மனை திரைப்படங்கள் என்னதான் பேய் படமாக இருந்தாலும் அதில் காமெடி மசாலாவையும் கொஞ்சம் சேர்த்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கிவிட்டார்.
அந்த வகையில் காமெடி நாயகன் கவுண்டமணியை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாகவே உருவாக்கி உள்ளார் இயக்குனர் சுந்தர் சி.
திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில். வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் இரண்டாம் பாவத்தை எடுக்க உள்ளதாக சுந்தர் சி அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த படத்துக்கு ஓப்பனிங் சீனில் ரம்பாவின் போட்டோவுக்கு மாலை போடுவது போன்று காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் ரம்பா அவர்கள் ஒரு கார் விபத்தில் இறந்து விடுவது போலவும் அதை தாங்க முடியாமல் கார்த்திக் அவர்கள் அமெரிக்கா செல்வது போலவும் காட்சி உருவாக்கியுள்ளாராம்.
மேலும் ஜெயிலில் இருந்து வெளியே வரும் மணிவண்ணன் ஒரு கலை கூத்தாடும் பெண்ணாக ரம்பாவை பார்க்கிறார் என்று இந்த கதையை கூறியுள்ளார். இந்த கதையை கேட்டவுடன் அனைவருக்குமே மிகவும் பிடித்து விட்டதாம் ஆனால் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் முதல் பாகம் எக்காரணத்தைக் கொண்டும் பாகம் 2ன் மூலம் முதல் பாகம் வீணாக கூடாது என்று எண்ணி உள்ளத்தை அள்ளித்தா படத்தின் இரண்டாவது பாகத்தை கைவிட்டு விட்டாராம் இயக்குனர் சுந்தர் சி.
ஆனால் தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என்றால் கவுண்டமணி, மணிவண்ணன் இடத்தை எந்த ஒரு நடிகராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் இந்த படத்தை தற்போது வரையிலும் எடுக்காமல் வைத்து விட்டாராம்.