தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சிம்பு. இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியாவை சம்பந்தமாக வைத்து தான் நகரும் என சொல்லப்படுகிறது.
பத்து தல படத்தில் கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது அண்மையில் படத்தின் டிரைலர் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்கையை செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு..
அடுத்ததாக நடிகர் கமலின் ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்காக சுமார் 100 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளதாம்.. மேலும் நடிகர் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.. இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் 1978 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த “சிகப்பு ரோஜாக்கள்”.
படத்தின் இரண்டாவது பாகம் தான் இது என சொல்லப்படுகிறது. சிகப்பு ரோஜாக்கள் இரண்டாவது பாகத்தை 2020 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க நடிகர் சிம்பு நடிக்க இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக அப்பொழுது கைவிடப்பட்டது.
தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அதை தூசி தட்டி படமாக எடுக்க இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதே நடக்கும் பட்சத்தில் கன்ஃபார்மாக மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.