கொரோனா காரணமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே அமைதியாக இருந்தால் அதுவே நாம் கொரோனாவை எதிர்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, திறைஅரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் படங்களின் ஷூட்டிங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளும் வீட்டிலேயே மூழ்கியுள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த படியே புகைப்படம் மற்றும் வீடியோக்கலை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முன்னணி காமெடி நடிகரான சூரி அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது மகள் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுபோல் இன்று அவர் வீட்டில் அவர் பிரியாணி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் சூரீ அவர் குழந்தைகளுடன் இணைந்து பிரியானி செய்துகொண்டிருக்கிறார். அவரது மனைவி வந்து ருசித்து பார்த்தபோது பிரியாணியில் உப்பு அதிகமாக இருக்கிறது. உடனே சூரி ருசித்து பார்த்துவிட்டு ஓடி விடுகிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
Corona day-7 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/lz3SwjJOMV
— Actor Soori (@sooriofficial) March 31, 2020