குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் கால் தடம் பதித்த பின் ஹீரோவாக ஒரு கட்டத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காதல், ஆக்சன் போன்ற படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகர் சிம்பு. ஒருகட்டத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டு விஸ்வரூபம் எடுத்தார்.
இது அனைத்தும் அவரது ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்தது. இப்படி சினிமாவுலகில் தொட்ட எல்லாத்திலேயும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். அதே அளவிற்கு பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தொடர் தோல்விகள் காரணமாக நடிகர் சிம்பு ஒரு கட்டத்தில் படத்தின் ஷூட்டிங்கை சரியாக வராமல் போவது பதிலையே படத்தை நிறுத்தவவுமாக ஒரு கட்டத்தில் இது எல்லாமே அவருக்கு மேலும் மேலும் தர்மசங்கடத்தை உண்டாக்க சினிமாவில் சிறு இடைவெளி விட்டார்.
உடல் எடை அதிகமாக ஏற்றுக்கொண்டதால் பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமலும் போனது. இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட சிம்பு இதற்கு மேலும் நாம் இப்படி பண்ணிக் கொண்டிருந்தால் சினிமா என்ற அந்தஸ்தை இழந்து விடுவோம் என்று உணர்ந்து ஒரு வழியாக உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தனது எண்ணங்களை மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார் அந்த வகையில் முதலில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் சுமாரான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது அதனைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமா உலகில் இப்படி நடித்துக் கொண்டிருந்தாலும் நடிகர் சிம்புவுக்கு வயதாகிக் கொண்டே போகிறது ரசிகர்கள் நீங்கள் யாரை தான் திருமணம் செய்வீர்கள் என கேட்டுக் கொண்டும் வருகின்றனர் ஆனால் சிம்புவோ இதுவரை மௌனம் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் ஈஸ்வரன் படத்தின் போது நிதி அகர்வாலுக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது ஆனால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மை என்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நிதி அகர்வால் டி நகர் உள்ள சிம்புவின் வீட்டில்தான் தங்கி இருந்ததாக தகவல் ஒருபக்கம் பரவிவருகிறது.
தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ் அல்டிமேட் என ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நிதி அகர்வால் தெலுங்கில் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். சூட்டிங் நேரம் போக வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர் என தெரியவருகிறது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு இரு வீட்டிலிருந்தும் பச்சை கொடி காட்டி உள்ளதால் ஏப்ரல் மாதத்தில் நல்லதொரு தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.