விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் டி ஆர் பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இளசுகள் முதல் குடும்ப இல்லத்தரசிகள் வரை அனைவரயும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சீரியலை வைத்து தான் ரசிகர்கள் மீம்களை தயாரித்து பாரதிகண்ணம்மா சீரியலை கிட்டல் செய்து வந்தார்கள். அதுவும் முக்கியமாக பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்ட உடன் கண்ணம்மா ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளிவந்து ரோடு ரோடாக சுத்துவார் இந்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமடைந்தது.
பிறகு கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவே ஸ்பெஷயல் எபிசோடு என்று கூறி மூன்று 3 மணி நேரத்தில் எட்டு வருடங்கள் கடந்து விட்டது என்று கூறி கதையை உல்டாவா மாற்றிவிட்டார்கள். இந்த எபிசோடுக்கு பிறகுதான் இந்நாடகத்தின் டிஆர்பி எங்கோ ஏகிர்ந்தது.
தற்பொழுது நாடகத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை கண்ணம்மா உடனும் மற்றொரு குழந்தை அவரின் மாமியாருடனும் வளர்ந்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் விழா நிகழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். அதில் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவுடன் மேடையில் இருக்கிறார்கள்.அதில் ரசிகை ஒருவர் வந்து ஹீரோவைப் பார்த்து உங்களுக்கு குறை இருக்குனு தெரிஞ்சும் ஏன் நீங்க அந்த பொண்ணு கிட்ட சொல்லல என்று கேட்டு அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.