தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமலஹாசன் மற்றும் முன்னணி கௌதமி நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் இணைந்து நடித்திருந்த திரைப்படம் பாபநாசம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமாகும். மலையாளத்தில் இப்படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அந்தவகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் வேட்டையை அடைந்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இதனை தொடர்ந்து மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் பிப்ரவரி 19ஆம் தேதி அமெசான் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது.
எனவே இப்படம் பாபநாசம் இரண்டாம் பாகமாக தமிழில் ரீமேக் செய்யப்படுமா என்று இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபொழுது திரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை பொருத்தது என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பாபநாசம் 2 படம் எடுப்பது கமலஹாசன் கையில்தான் உள்ளது அவர் என்ன கூறுகிறாரோ அதுவே நடக்கும் என்றும் விரைவில் அழைப்பார் என்று எதிர்பார்த்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாபநாசம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிறு வயது குழந்தையாக நடித்து இருந்த எஸ்தர் அனில் தற்பொழுது தனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வரைந்துள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாபநாச குட்டி குழந்தையா இது நம்பவே முடியலை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.