விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலின் மூலம் சித்ரா, காவியா மற்றும் குமரன் இவர்களுக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஹேமா.
ஹேமா ராஜ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்தவகையில் தற்போது சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. எனவே சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த சீரியலில் மீனாவின் குழந்தையாக நடித்து வரும் அந்த பெண் குழந்தை உண்மையிலேயே இவருக்கு பிறந்த குழந்தை தான் இது பலரும் அறியாத ஒரு விஷயம்.ஹேமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்த பிறகு மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹேமா. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்ததற்கு பிறகும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோஅந்த புகைப்படம்.