பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதோடு முல்லை மற்றும் கதிர் இவர்களின் ஒன்ஸ் கிரீன் இளசுகளின் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் கடைசி தம்பியாக நடித்து வருபவர் விக்ரம்.
இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் காலேஜ் படிக்கும் சின்ன பையனாக கண்ணன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதேபோல் இந்த சீரியலில் இவரை பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல தான் இருக்கிறார். ஆனால் இவருக்கு திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்ரம் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் உங்களுக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.