பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்யலாம் என்பதை நன்கு அறிந்து கொண்டு பல சீரியல்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது உள்ள மற்ற தொலைக் காட்சிகளுக்கும் விஜய் டிவிதான் டப் கொடுத்து வருகிறது. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது.
அந்த வகையில் தொடர்ந்து பல வாரங்களாக TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் முதியவர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவரும் வகையில் நான் அண்ணன் தம்பிகளின் பாச உறவு மற்றும் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை கேரக்டர்கள் இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு கேரக்டர்கள் தான். ஏனென்றால் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஆதரவு இந்த சீரியளுக்கு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்து உள்ளார்கள். தற்பொழுது இனிமேல் இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சி அறிமுகமாக உள்ளது. அதில் மூர்த்தி,ஜீவா, கதிர், கண்ணன்,முல்லை உள்ளிட்ட கேரக்டர்களுக்கு குழந்தைகள் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்கள்.
இந்நிலையில் தற்பொழுது சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜயை போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Pandian stores serial actor Jeeva dance #VaathiComing 🕺#Master @actorvijay pic.twitter.com/yRfxm7MXpD
— Priyamudan Karthik (@KarthikMdr3) April 28, 2021