தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் கமலஹாசன் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதுவும் முக்கியமாக இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமானதாக இருந்துள்ளது.
அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்து பல வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க காமெடி படமாக 2002ஆம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம்தான் பஞ்சதந்திரம்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இத்திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நான்கு நடிகர்களும் நடித்திருந்தார்கள். இவர்களை தொடர்ந்து சிம்ரன்,சினேகா,ரம்யா கிருஷ்ணன், தேவயானி என பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றினைந்து நடித்திருந்தார்கள். முக்கியமாக அந்த ஐந்து நடிகர்களும் செய்த சேட்டைகள் தான் ஹிட்டடித்தது.
அந்த ஐந்து நடிகர்களில் கமலஹாசனை தொடர்ந்து மற்ற ஒருவராக யூகி சேது நடித்திருந்தார். இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். அந்தவகையில் இத்திரைப்படத்தில் யூகிசேதுக்கு பதிலாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அதான் நடிக்க வைக்க முதலில் பேசி உள்ளார்கள்.
ஆனால் அப்போது ஸ்ரீகாந்த் மிகவும் பிஸியாக இருந்ததால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இத்திரைப்படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் சமீப பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியிருந்தார்.