கதிர் மேல் கோபப்பட்டு கையை நீட்டும் பாண்டியன்.. மருமகளின் லட்சணம் தெரிந்தால் என்ன நடக்கும்

pandian stores
pandian stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்க மயிலின் பித்தலாட்டம் எப்போது தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மூத்த மருமகளை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடும் பாண்டியன் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆனால் அதற்கு ரொம்ப நாள் காத்திருக்க தேவையில்லை. அடுத்தடுத்து ஒவ்வொரு குட்டாக வெளிப்படும் காலம் வந்துவிட்டது. அதன் முதல் படியாக தற்போது தங்கமயில் சரவணன் ஹனிமூன் சென்றபோது மறைக்கப்பட்ட விவகாரம் வெளியில் வர இருக்கிறது.

அக்கவுண்டில் இருந்து காணாமல் போன பணத்தை கதிர் தான் எடுத்திருக்கிறார் என பாண்டியனுக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே சும்மாவா இருப்பார் மூன்றாவது மகனை பார்த்தால் மட்டும் தான் இவருக்கு அடிக்க தோன்றும்.

அப்படித்தான் இப்போது பாண்டியன் கதிரை அடித்து பணத்தைக் கேட்டு அவமானப்படுத்துகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போய் நிற்கிறது. இன்றைய எபிசோடில் இந்த காட்சிகள் தான் வர இருக்கிறது

ஆனால் அதன் பிறகு சரவணன் உண்மையை கூறுவதும் தங்கமயில் மாட்டிக்கொண்டு முழிப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பிறகு மருமகளின் லட்சணம் தெரிந்த அதிர்ச்சியில் பாண்டியன் என்ன செய்யப் போகிறார்.

கதிரிடம் மன்னிப்பு கேட்பாரா மருமகளை திட்டுவாரா இல்லை ஒன்றுமே நடக்காதது போல் பூசி மழுப்பிவிட்டு சென்று விடுவாரா போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் விடை கிடைக்கும்.