வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் வித்தியாசமான சீரியல்களை இறக்கி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கபருந்து விழுகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி சொல்லவே தேவையில்லை புதுப்புது ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியலில் கொடுத்து அசத்தி வருகிறது.
இந்த டிவி- யில் மிகப்பெரிய ஃபேமஸான சீரியல் பாண்டியன் ஸ்டோர் இது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியலின் மையக்கரு என்னவென்றால் நான்கு அண்ணன் தம்பிகள் எப்படி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது தான் கதை.. கதையில் ட்விஸ்ட், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் இது பார்க்க தோன்றுகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்றவர்கள் அற்புதமாக நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது அரங்கேரி உள்ளது என்றால் ஜீவா – மீனா, கண்ணன் – ஐஸ்வர்யா ஆகியவர்கள் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர் இவர்களை சமாதானப்படுத்த தனம் மற்றும் கதிர் முயற்சிக்கின்றனர் ஆனால் அந்த பேச்சை எடுபடாத நிலையில் இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை எதிர வைக்கும் வகையில் சீரியல் அமைந்திருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த சீரியலில் கதிருக்கு மனைவியாக நடித்து வரும் முல்லை என்கின்ற லாவண்யா கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார் இவர் இதற்கு முன்பு சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகயாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லாவண்யா வெள்ளித்திரைகள் கால் தடம் பதித்துள்ளார். “ரேசர்” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் முல்லை என்கின்ற லாவண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.