விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த சீரியலில் ஆல் மாற்றம் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த படி எடுத்து வைப்பதற்காக கோவில் கோவிலாக தன்னுடைய அம்மாவுடன் சென்று உள்ள நிலையில் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
மூன்றாவது மருமகளாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி இந்த தொடரில் தனது ரோலில் இனிவரும் சீன்களில் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் விலகி விட்டதாக கூறியிருந்தார் எனவே ஐஸ்வர்யா கேரக்டர் இதற்கு மேல் வில்லியாக மாற்றப்படுமா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தற்பொழுது இவருக்கு பதிலாக இதற்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் சாய் காயத்ரி புதிய சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய பின் அவரது அம்மாவுடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று பூஜையை மேற்கொண்டு வருகிறார்.
வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..
அந்த வகையில் திருநாகேஸ்வரம் ராகு கோவில், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பூஜை மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் தனது அம்மாவுடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீல் செய்வதாக கூறியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்…