பொன்னியின் செல்வன் 2 படத்தை எதிர்த்து போட்டி போடும் “பாண்டியார்கள்”.? வெற்றி யார் பக்கம்.?

ponniyin-selvan-
ponniyin-selvan-

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் உருவாக்கிய படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டது அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் செய்தது. இதுவரை  பொன்னியின் செல்வன் கதையை படித்தும் கேட்டும் வந்தவர்கள்..

முதல்முறையாக படமாக பார்த்தனர் எதிர்பார்த்ததை விட பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பராக இருந்ததால் ஆரம்பத்திலேயே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது சொன்னது..

போலவே படத்தை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டது வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. படம் வெளிவர இன்னும் விரல் விட்டு என்னும் நாட்களில் இருப்பதால் படக்குழு தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது.

இதனால் பெத்த லாபம் எடுக்கலாம் என பட குழு கணித்துள்ளது. இந்த நிலையில் தான் பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்தை எதிர்த்து மற்றொரு  வரலாற்று கதையம்சம் கொண்ட யாத்திசை வருகின்ற 21ஆம் தேதி கோலாகலமாக  ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கி உள்ளார்.

படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது யாத்திசை திரைப்படம் பாண்டியர்களின்  வரலாற்றை பின்னணியாக கொண்டு படம் உருவாகி உள்ளது. இரண்டு திரைப்படங்களுமே இந்த மாதம் தான் வெளியாக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கேள இரண்டு படங்களில் உங்களுடைய பேவரைட் எது..