விஜய்க்காக எழுதிய கதையில் சூர்யா.! பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்

vijaysurya
vijaysurya

actor surya in vijay story: இளையதளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீஸர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே இந்த டீசர் ரசிகர்களிடையே மிகவும் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.

மேலும் நடிகர் சூர்யாவும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த படம் வந்த நாளில் இருந்து தற்போது வரை நல்ல விமர்சனத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே சூர்யா மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

இந்நிலையில் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தான் சூர்யா 40 இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படத்தின் கதையை சூர்யாவுக்கு முன்பே விஜயிடம் கூறி அவர் ஓகே சொன்னதாகவும் பின்பு மறுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்தே சூர்யா நடிக்க கமிட்டாகி உள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.