Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் மீனா வீட்டை விட்டு கிளம்பி இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஜனார்த்தனன் தனது சின்ன மாப்பிள்ளை பிரசாந்தின் பேச்சைக் கேட்டு பிசினஸ் ஆரம்பிப்பதாக பல லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த பிசினஸ்காக பணம் கொடுத்தவர்கள் ஜனார்த்தனனை வீட்டிற்கு தேடிவந்து அசிங்கப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் பிரசாந்த் ஜனார்த்தனுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு பாதி பணத்தை தந்து மீதியை அப்புறம் தருவதாக கூறுகிறார்.
இந்த விஷயத்தில் ஜீவாவும் தலையிட்டதால் அவரை ஜனார்த்தனன் இதைப்பற்றி உங்களுக்கு தெரியாது நான் பார்த்துகிறேன் என்று கூறிவிடுகிறார். எனவே ஜீவா வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய குடும்பத்தினர்களுடன் வந்துள்ளார். பிறகு ஜனார்த்தனன் பிரசாந்தை தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப்பொழுது தனது பணத்தை தருவ என்று கேட்கிறார்.
தர முடியாது எனக்கூறி ஜனார்த்தனனுடன் வந்த நபரை கல்லில் தள்ளிவிட்டு பிறகு ஜனார்த்தனையும் வயிற்றில் குத்தி விடுகிறார். இந்த நேரத்தில் போலீஸ் வர தன்னுடைய வைத்தையும் கிழித்துக்கொண்டு தன்னையும் தனது மாமனையும் வெட்டி விட்டு ஜீவா சென்று விட்டதாக கூற போலீஸ் ஜீவாவை கைது செய்கின்றனர்.
இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா மருத்துவமனைக்கு வர இந்த நேரத்தில் போலீசார்களிடம் பிரசாந்த் ஜீவா, கதிர் இருவரும் சொத்துக்கு ஆசைப்பட்டு தகராறு பண்ணுனாங்க சார் நான் எவ்வளவோ தடுக்க முயற்சி பண்ணுனேன் ஆனா அவங்க என்னையும் மாமாவையும் கத்தியால குத்திட்டு போயிட்டாங்க சார் என்று கூற இதனை எல்லாம் கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார்.
வீட்டிற்கு வந்த மீனா துணிமணிகளை எடுத்துக்கொண்டு தனத்தின் கையில் இருந்த கயலை வாங்கி வாடி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூறிவிட்டு கிளம்ப மீனா என்ன ஆச்சு என்று தனம் கேட்க இந்த வீட்டால பட்டது எல்லாம் போதும் இனிமே நான் இந்த வீட்டில இருக்க மாட்ட எங்க வீட்டுக்கு போறேன் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க என்று கூறிவிட்டு கிளம்ப சொல்றத கேளு மீனா என்று தனம் தடுக்கிறார். அதற்கு என்னை யாரும் தேடி வர வேண்டாம் என வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். உண்மை என்ன என்று தெரியாமல் இவ்வாறு மீனா பிரசாந்தின் பேச்சை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.