Pandiyan stores: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் நிறைவடைய உள்ளது. இவ்வாறு இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது செய்யாத தப்பிற்காக ஜீவா போலீசர்களிடம் சிக்கி உள்ளார்.
அதாவது ஜீவா-மீனா ஜனார்த்தனன் வீட்டில் குடும்பத்தினர்களை பிரிந்து இத்தனை நாட்களாக இருந்து வந்த நிலையில் புது வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஜீவாவும் இதுதான் என்னுடைய வீடு என ஜனார்த்தனிடம் கூறிவிடுகிறார்.
இந்த சமயத்தில் ஜனார்த்தனன் தனது சின்ன மாப்பிள்ளையிடம் பிசினஸ் செய்வதாக கூறி பல லட்சம் கொடுக்க ஒரு கட்டத்தில் போட்ட பணம் வராத காரணத்தினால் பணம் கொடுத்த பலரும் ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். உடனே சின்ன மாப்பிள்ளை பணம் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை பிறகு தருவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.
எனவே இதெல்லாம் தெரிந்த ஜீவா கேட்க இது எனக்கும் சின்ன மாப்பிள்ளைக்கும் இருக்கிற விஷயம் இதை நாங்க பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறி விடுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் இந்த வார ப்ரொமோவில் ஜனார்த்தனன் தன்னுடன் ஒருவரை அழைத்துக் கொண்டு சின்ன மாப்பிள்ளையை பார்ப்பதற்காக செல்கின்றனர்.
அங்கு இன்னைக்கு எனக்கு பணம் வந்தாக வேண்டும் என்று ஜனார்த்தனன் கூற தர முடியாது என்ன பண்ணுவீங்க என்று சின்ன மாப்பிள்ளை கேட்கிறார். பிறகு உடனே உன்ன போய் நம்புன பாரு அயோக்கிய பயலே என்று ஜனார்த்தனன் தள்ளி விடுகிறார். உடனே மாப்பிள்ளை ஜனார்த்தனனின் சட்டையைப் பிடிக்க பக்கத்தில் இருந்தவர் யாரு மேல கைய வைக்கிற என்று மாப்பிள்ளையிடம் சண்டை போடுகிறார்.
உடனே அவரை அழைத்து சென்று கீழே தள்ளிவிட மண்டையில் அடிபட்டு விடுகிறது. பிறகு கத்தியால் சண்டை போட்டுக் கொள்ள ஜனார்த்தனனை கத்தியால் குத்தி விடுகிறார் சின்ன மாப்பிள்ளை. இந்த நேரத்தில் போலீஸார்கள் வர எங்க மாமாவ வெட்டிட்டாங்க சார் தடுக்க வந்த என்னையும் வெட்டிட்டாங்க சார் என பொய் சொல்ல போலீசார்கள் ஜீவாவை அரெஸ்ட் செய்கின்றனர். மீனா பார்த்துக் கொண்டிருக்க நான் எதுவும் செய்யவில்லை மீனா என்று ஜீவா கூறுகிறார்.