Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் எப்படியாவது தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தனத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்துவிட வேண்டும் என மீனா முல்லை பிளான் போட்டுள்ளனர்.
தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறிய நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்தனர் பிறகு குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டு தான் அதற்கான ட்ரீட்மெண்ட் செய்தாக வேண்டும் என கூறி அதனால் தனம் கொஞ்ச நாள் கழித்து ட்ரீட்மெண்ட் செய்யலாம் என மீனாவிடம் கூறியிருந்தார்.
அதன் பிறகு ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்த நிலையில் திடீரென கண்ணனும் லஞ்சம் வாங்கியதால் போலீசில் மாட்டிக் கொண்டார். அதோட மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தையும் பிறந்தது. எனவே அடுத்தடுத்த பிரச்சனை வந்ததால் தனம் இதனை பற்றி யோசிக்கவே இல்லை மீனாவும் தனத்தை நினைத்து கவலைப்பட்டு வந்தார்.
மீனா தனத்திடம் எவ்வளவு கூறியும் கேட்காத நிலையில் ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்ட முல்லை மீனாவிடம் கேட்க பிறகு தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பதை கூறிவிடுகிறார் இதனால் முல்லை அதிர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மூர்த்தி தனத்தின் அண்ணனிடம் வேறு மருத்துவமனைக்கு தனத்தை அழைத்துச் செல்லலாம் எனக் கூற அவரும் அதற்கு தயார் செய்கிறார். எனவே மீனா எப்படியாவது அக்காவுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய மாமாவை ஒத்துக்க வைக்க வேண்டும் என முல்லையிடம் கூறுகிறார்.
பிறகு மீனா ஜீவாவிடம் வழியில் போகும்பொழுது அக்காவுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுனா என்ன பண்றது என கூற அதே போல் முல்லையும் கதிரிடம் பேசுகிறார். பிறகு இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து மூர்த்தியிடம் கூற என்ன செய்வது என்று தெரியாமல் முழிகிறார். இதற்கு மூர்த்தி ஒப்புக் கொள்வாரா யாருக்கும் தெரியாமல் தனத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்து விடுவார்களா என்பதனை இந்த வாரம் பார்க்கலாம்.