விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட நிலையில் எப்படியாவது இவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி வருகின்றனர்.
தனம் தனக்கு இருக்கும் பிரச்சனைகளை மறைத்து தனது கடமைகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதனை அடுத்து ஏற்கனவே கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயம் மேல் அதிகாரிக்கு தெரிய வர அவர் எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.
அந்த வகையில் லஞ்ச ஊழியர்களிடம் கண்ணனை பற்றி கூற அவர்களும் கண்ணனை அரெஸ்ட் செய்து விடுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கண்ணனை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர சொல்லி ஐஸ்வர்யா கெஞ்சுகிறார். இந்த நிலையில் கதிர் எவ்வளவு போராடியும் கணனை வீட்டிற்க்கு அழைத்து வர முடியவில்லை எனவே கதிர் வந்தவுடன் அவரை அழைத்து வந்துட்டீங்களா மாமா என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் இடத்திலிருந்து தான் படத்தை எடுத்து இருக்காங்க என சொல்கிறார்.
கண்ணன் வேண்டும் என்றே தான் பணத்தை வாங்கி இருக்கான் ஜெயிலில் கிடக்கட்டும் எனக் கூற ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது எனவே அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல பிறகு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. எனவே இதனை பார்க்க வந்த மூர்த்தியிடம் ஐஸ்வர்யா நாங்கள் பண்ணுனது தப்புதான் மாமா என மன்னிப்பு கேட்க அவன் பண்ணுன தப்புக்கு நீ என்னமா பண்ணுவ என்னதான் இருந்தாலும் உன்னையும் குழந்தையையும் பார்க்கிறது எங்க கடமை என கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.