Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா செய்த காரியத்தினால் தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரிய வர அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பதனால் விரைவில் இதற்காக சிகிச்சை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து வருகிறார். எனவே இதன் காரணமாக முல்லை, மீனா உதவியுடன் முதலில் ஆப்ரேஷன் செய்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க மேலும் ஜீவா தனது மாமனார் வீட்டில் இருந்து வந்து தனது குடும்பத்தினருடன் இணைத்துள்ளார் தற்பொழுது அனைவரும் புதிய வீட்டிற்கு குடி வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பது கதிருக்கு மட்டும் தெரிய வந்திருக்கும் நிலையில் விரைவில் இதற்காக சிகிச்சை செய்யலாம் என முடிவெடுத்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யாவின் மூலம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தனத்திற்கு கேன்சர் இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யா தனது யூடியூப் சேனலில் கேன்சரால பாதிக்கப்படுறவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா அப்படி பாதிக்கப்பட்டவங்க எங்க வீட்லயும் இருக்காங்க என்று அழுதுக் கொண்டே வீடியோ ஒன்றை போடுகிறார்.
எனவே இதனை பார்த்துவிட்டு மீனாவின் அப்பா, அம்மா வீட்டிற்கு வர மூர்த்தி கோபத்துடன் இப்படி ஒரு வீடியோ போட்டு இருக்க நம்ம வீட்ல யாருக்கும் ஒன்னும் இல்லன்னு சொல்லு என கத்த மீனாவை பார்த்தவுடன் அவருடைய அம்மா, அப்பா உனக்கும் எதுவும் இல்லல மீனா என பதட்டத்துடன் கேட்கின்றனர்.
இவரைத் தொடர்ந்து தனத்தின் அண்ணன் தனத்திடம் உனக்கு எதுவும் இல்லையில மா என கேட்க இவரைத் தொடர்ந்து அதேபோல் முல்லையின் அதேபோல் முல்லையின் அம்மா, அப்பாவும் கேட்கின்றனர். எனவே இதனால் கடுப்பான கஸ்தூரி எதற்கு பொய்யான வீடியோவை போட்ட என கண்டபடி திட்ட நான் அந்த வீடியோவுல சொன்னது எல்லாமே உண்மைதான் என ஐஸ்வர்யா கூறுகிறார்.
அதற்கு மூர்த்தி தனம் நம்ம வீட்ல யாருக்கு என்ன என கேட்க உடனே ஐஸ்வர்யா அக்கா எத்தனை முறை கேட்டாலும் சொல்ல மாட்டாங்க ஏன்னா அக்காவுக்கு தான் பிரஸ்ட் கேன்சர் எனக் கூற மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.