Pandiyan stores serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிய இருப்பதாக கூறப்படும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஒன்றிணைந்து விட்டால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடைந்து விடும் என்று சீரியல் பிரபலங்கள் கூறியிருந்தார்கள்.
கதிர், மூர்த்தி, கண்ணன் மூன்று பேரும் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மூர்த்தி ஜீவாவை கூப்பிடாத காரணத்தினால் ஜீவா மட்டும் தன்னுடைய மாமனார் வீட்டில் வாழ்ந்து வருகிறார் எனவே ஜனார்த்தனன் ஜீவாவை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
தனது சின்ன மாப்பிள்ளை உடன் சேர்ந்து பிசினஸ் செய்வதாக கூறி ஜீவாவை அசிங்கப்படுத்தினார். ஜீவா இந்த பிசினஸ் வேண்டாம் என்று சொல்ல அதற்கு அவருக்கு ஒன்னும் தெரியாது நீங்க செய்யுங்க மாப்பிள்ள என்று ஆதரவாக ஜகார்த்தனன் இருக்கிறார்.
எனவே இதனால் ஜீவாவிற்கு தவமானம் ஏற்பட மீனாட்சி தன்னுடைய அம்மா, அப்பா மீது செம கடுப்பிலிருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய புதிய வீட்டிற்கு குடி வந்திருக்கும் நிலையில் இதன் மூலம் ஜீவா மீண்டும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் இணைய உள்ளார்.
அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் வரும் ஜகார்த்தனன் வாங்க மாப்பிள்ளை வீட்டிற்கு போகலாம் அங்கு போய் பேசிக்கலாம் என்று கையைப் பிடித்து கூப்பிடுகிறார். இதற்கு மூர்த்தி யார் வீட்டுக்கு யார கூப்பிட்டுகிட்டு இருக்கீங்க இவன் என் தம்பிங்க என் உசுரு இவ எங்க கூட தான் இருப்பான்.
எங்க கூட தான் வாழ்வான் என கண்கலங்க இதற்கு ஜகார்த்தனன் பேசாம என்கூட வாங்க மாப்பிள்ள நம்ம வீட்டுக்கு போய் பேசி தீர்த்துக்கலாம் என கூற கையை எடுத்துவிட்டு நான் அங்கு வரல என்று கூற உடனே ஜகார்த்தனன் மீனாவை பிள்ளைய கூட்டிட்டு வாமா நம்ம போகலாம் என கூப்பிடுகிறார்.
இதற்குமே நான் என் புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் எப்படி இருக்க முடியும் இங்கிருந்து கிளம்புங்க என கூற ஜனார்த்தனன் கிளம்பி விடுகிறார். உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் ஜீவா தங்களுடன் வாழ சம்மதித்திருப்பது மகிழ்ச்சியினை தருகிறது இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.