கோலாகலமாக நடக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதுமனை புகுவிழா.. இந்த வார ப்ரோமோ

pandiyan stores
pandiyan stores

Pandiyan stores serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பல வருடங்களாக கட்டப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீடு முழுமையாக வேலைகள் நிறைவடைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. ஆனால் சமீப காலங்களாக ஒரே கதையை வைத்து உருட்டி வந்ததால் டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்டது அப்படி விரைவில் இந்த சீரியல் முடிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நான்கு அண்ணன் தம்பிகளுக்கும் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் திடீரென தனம் பிரஸ்ட் கேன்சரால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக முதலில் குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்துள்ளார்கள்.

இது குறித்த உண்மை கதிருக்கு தெரிய வர கதிரின் உதவியுடன் முல்லை, மீனா தனத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ட்ரீட்மெண்ட் செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது ஜீவா கதிர் இணைந்து வீட்டை அலங்காரம் செய்கின்றனர் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் தங்களது புது வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

அப்பொழுது வீடு எப்படி இருக்கு என்று மூர்த்தி கேட்க நன்றாக இருப்பதாக தனம் சொல்கிறார். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று மீனா சொல்ல ரிப்பனை கட் பண்ணுகிறார். அப்பொழுது தனலட்சுமி இல்லம் என்று இருப்பதை பார்த்து தனம் எதற்கு என்னுடைய பெயரை வைத்தீர்கள் என கேட்க அதற்கு மூர்த்தி எல்லாரும் ஆசைப்பட்டாங்க அதனாலதான் என கூறிவிட்டு வீட்டிற்குள் செல்கின்றனர்.