விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணன் தம்பிகள் சொத்திற்காக சண்டை போட்டுக்கொண்டு கேஸ் கோர்ட் என அலைந்து வரும் கதையை கதிர் கூறுகிறார்.
அப்பொழுது கதிரிடம் தனம் உங்களுக்குள் சண்டை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல அதற்கு கண்ணன் நம்மகிட்ட தான் அம்புட்டு சொத்து இல்லையே அதனால சண்டை வராது கவலைப்படாதீங்க எனக் கூற மூர்த்தி அவனை வாய மூட சொல்லு என கூற பிறகு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து தனம் வீட்டு வேலை எதுவரையும் நடந்துகிட்டு இருக்கு என கேட்க கண்ணன் இன்னைக்கு அந்த பக்கமாக தான் போனேன் ஆனால் வீட்டு வேலை எதுவும் நடக்கிற மாதிரி தெரியலையே என கேட்க அதற்கு மூர்த்தி பெயிண்ட் அடிக்கிறதுக்கு சொல்லிட்டு வந்ததோடு இருக்கு என சொல்ல நாளைக்கு ஆரம்பிச்சிடுங்க என தனம் கூறிகிறார்.
அதற்கு மூர்த்தி முடியாது ஒரு இழவு இருப்பதாக சொல்கிறார் அதாவது பக்கத்து கடையில் இருப்பவரின் சம்சாரம் கேன்சர் வந்து இறந்து விட்டதாக கூற தனம் அதிர்ச்சடைகிறார். பிறகு கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் தனக்கு தெரிந்தவர்களுக்கு கேன்சர் வந்ததை குறித்து சொல்லிக் கொண்டிருக்க இதனால் பதட்டமான தனம் ரசம் எடுத்து வருவதாக கூறி கிச்சனுக்கு சென்று விட்டு அழுது கொண்டிருக்கிறார்.
பிறகு மூர்த்தி தனத்தை அழைக்க தனம் வருகிறார். மூர்த்தியிடம் மாமா எனக்கு அப்படி ஏதாச்சும் ஆயிடுச்சுனா என்ன பண்ணுவீங்க என கேட்க கோபப்பட்டு மூர்த்தி சாப்பாடு வேணாம் ஒன்னும் வேணாம் பேசுற பேச்சா இது என்ன பேசுற நினைக்கும் போதே பயமா இருக்கு என கோபப்பட அதே போல் மற்றவர்களும் கோபப்படுகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் இன்னைக்கு டாக்டரை பார்க்க போனோமா அவங்க என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே என தனியாக புலம்பி கொண்டு இருக்க இதனைப் பார்த்த கண்ணன் அண்ணி உங்களுக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்ல ஏன் உங்க கண்ணு சிவந்து இருக்கு என கேட்கிறார் சமைப்பதனால் கண்ணு கலங்குது என சொல்ல பிறகு கண்ணன் நான் சமைக்கட்டுமா என கூற அதற்கு தனம் திட்டி அனுப்பி வைத்து விடுகிறார்.
கண்ணன் தனத்தை பற்றிய யோசித்துக் கொண்டு செல்ல கதிரின் மேல் இடித்து விடுகிறார் பிறகு என்னாச்சு என கதிர் கேட்க இத மாதிரி என திட்டிட்டாங்க என்று சொல்ல பிறகு கதிர் தனத்திடம் சென்று என்னாச்சு அண்ணி? எனக் கேட்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என என்னுடைய தலையில் எழுதி வைத்து ஒட்டிக்கிட்டுமா என கூறிவிட்டு பிறகு எனக்கு ஏதாச்சும் ஆயிடுச்சு நா நீ மாமாவ பாத்துப்பியா என கேட்கிறார்.
ஏன் அண்ணி அப்படி எல்லாம் சொல்றீங்க நீங்க அப்படி பேசாதீங்க நீங்க சொல்றத நினைச்சு பார்க்கும்போது கஷ்டமா இருக்கு என இவ்வாறு பேசிக் கொண்டிருக்க மறுபுறம் மீனா ஜீவாவை எழுந்து சாப்பிடு என சொல்லிவிட்டு தனது அம்மாவிடம் வந்து கயல் கிளம்பிட்டாளா என கேட்க அப்பா அழைச்சிட்டு போயிட்டாரு என சொல்கிறார்.
பிறகு மீண்டும் ஜீவாவை எழுப்ப அவருக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பது தெரிய வருகிறது. அப்பொழுது மீனா சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுத்து விட்டு தனம் அக்கா வீட்டுக்கு போக வேண்டும் என சொல்ல மீனாவின் அம்மா கோபப்படுகிறார். ஆனால் ஜீவா போயிட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைக்கிறார் இதனை அடுத்து மீனா தனம் இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் டாக்டர் உங்களுடைய ஹஸ்பண்ட் எங்க எனக்கு கேட்க இன்னும் அவர்களிடம் சொல்லவில்லை என கூறுகிறார் அவங்க இல்லாம எப்படி என கேட்க மீனா அதற்கு சொல்லி விடுவோம் என சொல்கிறார்.
பிறகு மருத்துவரிடம் தனம் நான் செத்து விடுவேனா டாக்டர் என சொல்ல அப்படி எல்லாம் கிடையாது உடனடியா நம்ப ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணனும் என கூற அதற்கு மீனா இவங்க மாசமா இருக்காங்களே குழந்தைக்கு எதாச்சும் ஆயிடுமா என கேட்க இல்லை ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்து விட வேண்டும் அதன் பிறகு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும் என கூற தனம், மீனா இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.