விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் முல்லை, ஐஸ்வர்யா, பார்வதி என மூன்று பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஐஸ்வர்யா முல்லையின் குழந்தையுடன் போட்டோ எடுக்க போக பார்வதி போட்டோ எடுக்காத எல்லாரும் கண்ணு வச்சிடுவாங்க எனக் கூற ஐஸ்வர்யா நான் யாருக்கும் காட்ட மாட்டேன் என சொல்கிறார்.
பிறகு நீ தான் ஊருக்கே தெரியுற மாதிரி வீடியோ போடுறியாமே என சொல்ல அதற்கு இங்க பாருங்கள் அக்கா என கூறுகிறார் இதற்கு முல்லை உனக்கு எல்லாம் எங்க அம்மா தாண்டி சரி என சொல்ல இந்த நேரத்தில் மீனா, தனம் இருவரும் வருகிறார்கள். பார்வதி அக்கா தங்கச்சி இருவரும் எங்க போய்ட்டு வரீங்க என கேட்க கோவிலுக்கு போயிட்டு வருவதாக மீனா சொல்லுகிறார்.
இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம கோவிலுக்கு என கேட்க கோவிலுக்கு போறதுக்கு எல்லாம் காரணம் வேணுமா என சொல்கிறார் அதற்கு ஐஸ்வர்யா மீனா அக்காவுக்கு போன் பண்ணி கோவிலுக்கு அழைச்சிட்டு போறீங்க நான் வீட்லதான் இருக்கேன் என்ன அழைச்சுக்கிட்டு போகலாம்ல எனக் கூற முல்லை மீனாதான் கோயிலுக்கு போகலாம் என என்ன கூப்பிட்டதாக தனம் சொல்கிறார்.
பிறகு எந்த கோவிலுக்கு என பார்வதி கேட்க மீனா அம்மன் கோவிலுக்கு என சொல்கிறார் அப்பொழுது நீங்கள் இரண்டு பேரும் பண்றது ஏதோ சரியா படல என கூற ஆமா அப்படித்தான் இருக்கு என முல்லை சொல்ல இவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க பிறகு தனம் நான் ரூமிற்குள் சென்று வருகிறேன் என கூற என்ன அக்கா குழந்தையை பாக்கலையா எனக் கேட்க வெளியில் போய்ட்டு வந்தால் கை, கால் கழுவிட்டு வருகிறேன் என சமாளிக்கிறார்
பிறகு பார்வதி மீனாவிடம் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே என கேட்க என்ன சித்தி என மீனா கேட்கிறார் அதற்கு என்ன நீங்க பண்றது எதுவும் சரியில்லை என கேட்க கோவிலுக்கு போயிட்டு வரது ஒரு விஷயமா எனக் கூறி விட்டு மீனாவும் தனத்தின் பின்னாடி செல்கிறார். பிறகு தனம், ஐஸ்வர்யா, முல்லை மற்றும் மீனா நான்கு பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மீனாவை இங்கே இருக்குமாறு முல்லை கூறுகிறார்.
அதாவது நாம நான்கு பேரும் ஒக்காந்து பேசி ரொம்ப நாளாச்சு இங்கே இருங்க எனக் கூற அதற்கு ஐஸ்வர்யா மீனாவிடம் ஏன் அக்கா உனக்கும் மாமாவுக்கும் சண்டையா என கேட்க எனக்கும் ஜீவாவுக்கும் ஏன் சண்டை வரப்போகுது என சொல்லுகிறார். அதற்கு இல்லை இங்கேயே இருக்கீங்களே அதான் கேட்கிறேன் என பேசிக் கொண்டிருக்க ஜீவா வந்து விடுகிறார்
அப்பொழுது முல்லை மாமா வந்துட்டாங்க நீ மாமா கிட்ட கேலு என சொல்ல என்னப்பா என்ன ஜீவா கேட்கிறார் இல்ல உங்களுக்கு மீனா அக்காவுக்கும் சண்டையா என கேட்க எனக்கும் அவளுக்கும் என்ன சண்டை வரப்போகுது நான் தான் அவ எது சொன்னாலும் தலையை ஆட்டுறனே என சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தனத்தை பார்த்து என்ன நீ ஒரு மாதிரியா இருக்கீங்க முகமே சரியில்லையே என கேட்க அதற்கு மீனா மாசமா இருக்காங்களா அது அப்படித்தான் இருக்கும் என சொல்ல ஆனால் எனக்கு அப்படி இல்லையே என ஐஸ்வர்யா கூறுகிறார்.
என்னவோ 10 புள்ள பெத்த மாதிரி தான் பேசுவார் என சொல்லிவிட்டு மீனா ஜீவா இருவரும் கிளம்பி விடுகிறார்கள். ஜீவா வண்டியில் போகும்பொழுது பேச மீனா எதற்கெடுத்தாலும் ஆமா ஆமா எனக் கூற ஜிவாவிற்கு சந்தேகம் வந்து வண்டியை நிப்பாட்டி என்னாடி எதுக்கெடுத்தாலும் ஆமானு சொல்ற நீ இப்படிப்பட்ட ஆளே கிடையாது நிறுத்தாம பேசிக்கிட்டே இருப்ப மேலும் எங்க வீட்டுக்கு போகவே மாட்ட உங்க வீட்டிலேயே தான் இருக்கணும்னு நினைப்ப கயல விட்டு அஞ்சு நிமிஷம் பிரியமாட்ட இப்பல்லாம் கயல் அங்க விட்டுட்டு நீ இங்க வந்துடுற ஏதோ சரியா படல எனக்கு கூற அதற்கு மீனா அப்படி எல்லாம் இல்லை ஜிவா எல்லாரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியா இருப்பாங்க என கேட்க உன் புருஷன் நான் உன்ன பத்தி எனக்கு தெரியாதா என கூற இவ்வாறு இவர்கள் நடு ரோட்டில் இன்று பேசிக் கொண்டிருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.