வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் ஜகார்த்தனனிடம் அசிங்கப்படும் ஜீவா.! ஓட்டு கேட்ட ஐஸ்வர்யாவை இழுத்துச் சென்ற கண்ணன்..

pandiyan stores
pandiyan stores

Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மூர்த்தி தனத்தை அழைத்து டீ கேட்கிறார். ஆனால் இந்த நேரத்தில் கதிரை அனைவருக்கும் டீ போட்டுஎடுத்து வருகிறார். பிறகு இதற்கு மேல் யாரும் சமைக்க வேண்டாம் கடையில் இருப்பதை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொல்ல ஏண்டா என கேட்கிறார்.

வீட்டில் மூன்று பச்ச பிள்ளைங்க இருக்கு அத வச்சுக்கிட்டு எப்படி சமைக்க முடியும் அதனாலதான் இந்த முடிவு இது சரியா தான் வரும் என சொல்ல இந்த நேரத்தில் கஸ்தூரி கதிர் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டான் பாரு என சொல்கிறார். இதனை அடுத்த மறுபுறம் ஜனார்த்தனனை பார்க்க சின்ன மாப்பிள்ளை வருகிறார்.

அப்பொழுது புதிய பிசினஸ் ஆரம்பிப்பதாக சொல்ல இதனைப் பற்றி ஜீவா கேட்கிறார். அப்பொழுது இந்த பிசினஸில் பணத்தை போட்டு தான் ஆக வேண்டுமா என கேட்க அதற்கு இதெல்லாம் செஞ்சா தான் தெரியும் என ஜகார்த்தனன் சொல்கிறார். பிறகு இதனால் வந்துவிட ஜனார்த்தனன் தனது சின்ன மாப்பிள்ளையிடம் அவர் அப்படிதான் இதெல்லாம் தெரியாது என பேசிக்கொண்டு இருக்க இது மீனா, ஜிவாவின் காதில் விழுந்து விடுகிறது. மீனா கோபப்பட ஆனால் ஜீவா மீனாவை தடுத்து நிறுத்துகிறார்.

இதனை அடுத்து மீனாவும் வீட்டிற்கு வர அங்கு தனம், மீனா, முல்லை மூன்று பேரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனை ஐஸ்வர்யா கஸ்தூரி ஒட்டு கேட்டுக்கொண்டு இருக்க இதனை பார்த்த கண்ணன் இப்படியெல்லாம் செஞ்சேனா  இனிமே அவ்ளோதான் புள்ளைய பார்த்துக்கிட்டியா டிவிய பார்த்தியா அதோட வச்சுக்க என திட்டி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.

கஸ்தூரியும் ஐஸ்வர்யாவை திட்டுகிறார் பிறகு ஜீவா கதிரை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு செல்கிறார். இதனை அடுத்து மூர்த்தியும் வர அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்  புது வீட்டு வேலைகளை ஆரம்பித்து விரைவில் வீடு குடி போய்விடலாம் என்று சொல்ல அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். பிறகு ஜீவா வீட்டிற்கு கிளம்ப  பணத்தை சின்ன மாப்பிள்ளையிடம் ஜனார்த்தனன் தருகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.