pandiyan stores; விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. தற்பொழுது கண்ணன் லஞ்சம் வாங்கிய புகாரில் சிறைக்கு சென்ற நிலையில் கதிர், ஜீவாவின் போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அனைவரும் கண்ணனை மணித்தாலும் மூர்த்தி கண்ணனை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருவதனால் காலில் விழுந்து கதறுகிறார். இருந்தாலும் மூர்த்தி சமாதானம் ஆகவில்லை. இவ்வாறு கண்ணன் தான் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் இருந்து வரும் நிலையில் இதற்கிடையில் மார்பக புற்றுநோய் இருப்பது தனத்திற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அதற்கு சிகிச்சை பெறாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்.
எனவே இதனால் மீனா பயத்திலிருந்து வரும் நிலையில் எப்படி அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார். இவ்வாறு தள்ளிப் போட்டுக் கொண்டே போவதனால் நோய் அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என தனத்திடம் கூறினாலும் தனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இது குறித்து தனத்திடம் மிகவும் கோபத்துடன் சண்டை போடுகிறார் மீனா. அதனை முல்லை பார்த்து விட முல்லைக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. இது குறித்து மீனாவிடம் கேட்க தனம் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவருக்கு இருக்கும் பிரச்சனையை கூறும்படி கேட்கிறார் முல்லை.
இதனை அடுத்து பொறுக்க முடியாத மீனா முல்லையிடம் உண்மைகளை போட்டு உடைக்கிறார். இவ்வாறு இதன்மூலம் அனைவருக்கும் தெரிய வந்து தனத்திற்கு ஆபரேஷன் செய்ய முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை எப்படி குடும்பத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதை வைத்து கதைகளும் நகர இருக்கிறது.