பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்களின் பெரும் ஆதரவை அளித்து வருகிறார்கள்.
இவர்கள் பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பம் மற்றும் காதலை மையமாக வைத்து மிகவும் சுறுசுறுப்பாக எதிர்பார்ப்புகளுடன் இயக்கப்படுவதால் அந்த சீரியல்கள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறது.
அந்தவகையில் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக முல்லை-கதிர் கேரக்டரில் நடித்து வரும் குமரன் மற்றும் சித்ரா இவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
தற்போது சித்ரா மறைவிற்கு பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் அறிவுமணி கேரக்டரில் நடித்து வந்த காவியா நடித்து வருகிறார். இவரும் தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இவ்வாறு மிகவும் சுறுசுறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலை ஃப்ளாஷ்பேக் கதையை கூற உள்ளார்கள். அந்த வகையில் மூர்த்தி, ஜீவா, கதிர் ஆகியோர் சின்ன குழந்தைகளாக மாறி உள்ளார்கள். அதற்காக மூன்று குழந்தைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள். எனவே ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.