பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகங்களில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சீரியல் 4 அண்ணன் தம்பி உறவுகளையும், கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து இயக்கப்படுவதால் முதியவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் போன்றோருக்கு மிகவும் பிடித்த நாடகமாக விளங்குகிறது. இதனை தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை இவர்களின் லவ் இளசுகளின் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் வர உள்ளது. அதற்கு சில குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாக உள்ளார்.அந்தவகையில் முல்லை கதாபாத்திரத்தில் படிக்கும் குழந்தையின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் vj சித்ரா நடித்து வந்தார் அவரின் மறைவிற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான காவிய நடித்து வருகிறார். காவியாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.