விக்ரம் நடித்துள்ள படத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையா.! எந்த திரைப்படம் தெரியுமா.?

vikram-45
vikram-45

சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர்கள் ஏதாவது ஒரு திறமையை வைத்துள்ளார்கள். அந்த வகையில் படத்திற்கு ஏற்றாற்போல் தனது உடல் எடையை வருத்திக்கொண்டு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம்.தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.

ஏனென்றால் இவர் நடித்துள்ள அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் பெற்றுள்ளது. அதுவும் முக்கியமாக இவர் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படத்தில் எந்த அளவிற்கு தனது உடலை அத்திரைப்படத்திற்க்கு ஏற்றாற்போல் தனது உடலை மாற்றிக் கொண்டார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். அதோடு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இவர் கோபுரம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வந்தாலும் ஆரம்பத்தில் இவர் சில தோல்வி திரைப்படங்களையும் தந்துள்ளார். அந்தவகையில் ஏஎல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம்தான் தாண்டவம்.

இத்திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த நடிகை விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், அது வேரு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனம் என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் சுஜித்ரா. இவர்தான் தாண்டவம் திரைப்படத்தில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sujitha 1
sujitha 1