பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை காவிய நடிக்கவிருக்கும் முதல் திரைப்படம்.! அவருக்கு ஜோடி யார் தெரியுமா?

kaviya22
kaviya22

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது.

அதோடு இந்த சீரியல் மலையாளம், தெலுங்கு,மராத்தி உட்பட இன்னும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் மிகவும் பிரபலமடைந்த கேரக்டர் முல்லை. முல்லை கேரக்டரில் தொகுப்பாளினி சித்ரா நடித்து வந்தார்.

இவரின் மறைவிற்குப் பிறகு தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்த காவியா நடித்து வருகிறார். காவியாவும் சித்ரா அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அதோடு இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் காவியா வெள்ளித்திரையில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வகையில் பிரபல சன் டிவி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதோடு சமீபத்தில் இவர் இயக்குனர் சக்திவேல் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பரத் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை,வெள்ளித்திரை பிரபலங்கள் என்று அனைவரும் காவியாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.