தற்பொழுது கொரோனா பரவலின் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது அதோடு வீட்டை விட்டே யாரும் வெளிவரக் கூடாது என்று முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் சின்னத்திரை வெள்ளித்திரை என்ற அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து நடிகர் நடிகைகளும் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அந்தவகையில் பலரும் தங்களது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் டப்ஸ்மாஷ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆகவே இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இந்த சீரியலில் பல வித்தியாசமான சுவாரஸ்யமான எபிசோடுகள் பங்கு பெறுவதால் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த சீரியலின் பிளாஷ்பேக் கதைகள் மற்றும் மூர்த்தி தனம் திருமணம் உள்ளிட்ட காட்சிகள் நடைபெற்று முடிந்தது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த அவர்தான் நடிகர் வெங்கட்.
இவரும் தனது சிறந்த நடிப்பின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 25) அன்று நடிகர் கவுண்டமணியின் 80வது பிறந்தநாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும் பல ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.
அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் தனது மனைவி குழந்தைகளுடன் இணைந்து செந்தில் மற்றும் கவுண்டமணியின் காமெடி ஒன்று இருக்கு டப்ஸ்மாஷ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.