நீண்ட காலமாக விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒன்று. இந்த நாடகத்திற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் சிறப்பு தான் ஆனால் இந்த சீரியல் மட்டும் தனி சிறப்பு மிக்கது, ஏனென்றால் இந்த நாடகம் அண்ணன் தம்பி ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிமுகமானார. அதன்பிறகு மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு கயல் என்று பெயர் சூட்டப்பட்டது.
பிறகு பல வருடங்கள் கழித்து தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் முல்லையை கதிர் எவ்வாறு பார்த்துக் கொள்வார் இல்லை ஏதேனும் நடந்து முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.
பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிடப்பட்ட வீடியோவில்தான் கயல் வேடத்தில் நடிக்கும், அம்மா என்று கூறும் ஒரு சின்ன குழந்தையிடம் கதிர் தனது பெயரை உச்சரித்து கதிர் என்று கூறு என்கிறார் இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.