Pandian stores today episode september 28 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலுக்கு சென்ற மூர்த்தி தனம் இருவரும் பிரசாந்தை பார்க்கலாம் என செல்கிறார்கள். ஆனால் பிரசாந்த் நடிப்பில் சிவாஜி கணேசனையே தோற்கடித்து விடுவார் போல அந்த அளவு நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மல்லி வர உடனே மூர்த்தி தனத்திடம் உங்க தம்பிங்க கண்டிப்பா வெளியில வர மாட்டாங்க அவனுங்க தான் இந்த தப்பை பண்ணுனது என பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் கடுப்பான தனம் நானும் பேச வேணாம்னு நினைச்சா ரொம்ப தான் பேசுறீங்க அவங்க ரெண்டு பேரும் எந்த தப்பும் செய்யல அதை நிரூபிக்க தான் போறோம் ஜீவாவும் காதிரும் கண்டிப்பா வெளியில வருவாங்க என தனம் கூறுகிறார் உடனே மூர்த்தி இங்க பாருடா பிரசாந்த் ரொம்ப நாள் நீ தப்பிக்க முடியாது உன் களவாணி தனத்துக்கு எல்லாம் ஒரு நாள் முடிவு கட்ட தான் போறோம் நீ சிக்க தான் போற என பேசுகிறார்.
இருவரும் மீனா வீட்டிற்கு சென்று மீனாவை கூப்பிட போகிறார்கள் ஆனால் மீனாவின் அம்மா இங்கே எதற்கு வந்தீங்க தம்பிகளை விட்டு அடிக்க சொல்லிட்டு சமாதான பேச வந்தீங்களா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் நீங்க பணம் இல்லாம கஷ்டப்பட்ட அந்த சமயத்துல அந்த வீணா போன வீட அவரு தானா வாங்குனாரு, கண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் என் புருஷன் தானே ஓடி வந்தார், உங்க கடையில பிரச்சனைன்னு தெரிஞ்சதும் அவர்தான் முன்னாடி வந்தாரு இப்படி இருந்த மனுஷனுக்கு நீங்க காட்டுன நன்றி கடன் இதுதானா.
முதல்ல இவுங்களை வெளியில போக சொல்லு மீனா என தன்னுடைய மகளிடம் மீனாவின் அம்மா கூற நீ உள்ள போமா நான் பேசிக்கொள்கிறேன் எனக் கூறுகிறார் மீனா, மூர்த்தி தனம் பேசும் பொழுது கையெழுத்து கும்பிட்டு தயவுசெய்து என்னை இனிமேல் அங்க கூப்பிடாதீங்க எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கதிரும் ஜீவவும் இப்படி பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறியா மீனா என்ன கேட்க கதிர் வந்து மிரட்டி இருக்காரு வேற எப்படி நினைக்கிறது எனக் கூற இதனால் மூர்த்தி தனம் உடைந்து விடுகிறார்கள்.
பிறகு இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள், வீட்டில் முல்லை தனியாக அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது அவரின் அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார் நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் கூடவே இருப்பாரு ட்ரீட்மெண்டுக்கு நான் போனப்ப கூட ஒரு முகம் காமிக்காம என்கூடவே வந்தாரு என பேசிக் கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் தனம் மூர்த்தி வீட்டுக்கு வருகிறார்கள் வீட்டிற்கு வந்து மீனா இங்கே என அனைவரும் கேட்க மீனா அவங்க அம்மா கூட இருக்கிறாள் ஃபர்ஸ்ட் ஜீவா வெளியில வரட்டும் ஜனார்த்தனன் கண் விழிக்கட்டும் அதுக்கப்புறம் போய் மீனாவை கூப்பிட்டுக்கலாம் எனக் கூறுகிறார். உடனே முல்லை யார் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை மீனா அப்படி நினைக்கலைல என கேட்க தனம் அழுகிறார் உடனே முல்லை அப்ப மீனாவும் அப்படித்தான் நினைக்கிறார்களா என அழுது கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.