செந்திலை அடிப்பதற்கு கை ஓங்கிய பாண்டியன் கையைப் பிடித்த மீனா.. பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

pandian stores 2 viral news
pandian stores 2 viral news

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய சீரியலில் சரவணனுக்கு பெண் பார்க்க போனதில் பெண் வீட்டார் இந்த சம்பந்தம் வேண்டாம் என சொன்னதால் பாண்டியன் சோகத்தில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் செந்தில் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது வாக்குவாதம் முத்துகிறது. உன்னால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை உன் கூட தான வேலை பாக்குறாங்க வர சொல்லி அவமானப் படுத்துறாங்களா. அதுக்கு காரணம் நீ தான் என கூறி செந்தில் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மீனாவும் பதிலுக்கு பதில் பேச பாண்டியனுக்கு இது தெரிய வர உடனே கதவை தட்டி செந்திலை வெளியே கூப்பிடுகிறார். கதவை திறந்து விட்டு வெளியே வந்த செந்திலிடம் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை ஏன் இப்படி ஊருக்கு கேக்குற மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க என பேசுகிறார். நானும் உன் அம்மாவும் என்னைக்காவது சண்டை போட்டதை பார்த்து இருக்கியா என கேட்கிறார்.எங்க பிரச்சனையை நாங்க பாத்துகிறோம் மாமா என முதலில் பேசுகிறார். உடனே செந்தில் நீ வாய மூடிட்டு இரு  உன்னால தான் எல்லா பிரச்சனையும் என மீனாவை பார்த்து சொல்ல, உடனே பாண்டியன் அந்த புள்ளைய ஏன் மிரட்டுற  என பேசுகிறார்.

அப்படியே ஓங்கி அடிச்ச என கையை ஓங்குகிறார் பாண்டியன். அந்த சமயத்தில் மீனா கையை பிடித்து என்ன செய்றீங்க எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் அடிக்கிற வேலையெல்லாம் வேணாம் என மீனா பாண்டியனிடம் சொல்கிறார். இதை பார்த்த கோமதி அப்பா மகனுக்குள்ள பிரச்சனை நீ எதுக்கு உள்ள வர முந்திரிக்கொட்டை மாதிரி என மீனாவை பார்த்து கேட்கிறார். அதைத்தொடர்ந்து செந்தில்  எங்க அப்பாவுக்கு என்ன அடிக்க திட்ட உரிமை இருக்கு நீ யாரு அத கேக்குறதுக்கு வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா என மீனாவை திட்டுகிறார். என் பிள்ளையை அடிக்க கூட எனக்கு உரிமை இல்லையா என கோமதி இடம் கேட்கிறார்.

செந்தில் மீனாவை திட்டுவதற்கு சரவணனுக்கு கல்யாணம் நடக்கல என பேச அதற்கு காரணம் நீ தானே இப்ப கொதிக்கிற இல்ல, அப்பவே இந்த புத்தி உனக்கு தெரியாதா என பேசுகிறார் பாண்டியன். உடனே பாண்டியன் வெளிய நிற்கிறார் அப்பொழுது சரவணன் பாண்டியனிடம் எனக்கு கல்யாணம் ஆகாதது கூட பிரச்சனை கிடையாது அதனால நீங்க எல்லாம் இப்படி சண்டை போட்டுக்கிறது தான்  எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகாதத வச்சு தம்பிகளை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க அப்பா, அவங்கள ரொம்ப குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காதிங்க. அவங்களது நிம்மதியா இருக்கட்டும் என சரவணன் கூறுகிறார்.

உடனே பாண்டியன் சரவணணை கட்டிப்பிடிக்கிறார். அதோடு சரவணன் எவ்வளவு அடிக்கிறதா இருந்தாலும் என்ன அடிங்கப்பா உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு என பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.