ராஜியை ரோட்டிலேயே வைத்து சண்டை போடும் கதிர்! மீனா விடம் நடந்த அனைத்தையும் சொல்லி வருத்தப்படும் ராஜி!! ரொமான்ஸ் செய்து மாட்டிக்கொள்ளும் மீனா, செந்தில்..

pandian stores 2 march 6
pandian stores 2 march 6

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ராஜி அவரது தோழியுடன் பஸ்ஸிலிருந்து இறங்குகிறார். அப்போது கதிர் அவர்களைப் பாத்துட்டு எங்கே போயிட்டு வரீங்க என கேட்கிறார். அதற்கு ராஜி நான் திருச்சிக்கு கண்ணனை தேடி போனேன் அவன்கிட்ட இருந்து நகையையும் பணத்தையும் எப்படியாவது வாங்கிடலாம்னு போனேன் என கூறுகிறார்.

அதற்கு கதிர் அவன் ஒரு ரவுடி, பொறுக்கி நீ போன உடனே இந்த  பணம் நகை என  எடுத்து கொடுத்துடுவானா ஏன் தான் இப்படி முட்டாள்தனமா இருக்கியோ எங்க போனாலும் சொல்லிட்டு போக மாட்டியா என கேட்கிறார். ஒழுங்கா ஒன்னு நீ எங்க வீட்ல இரு, இல்ல உங்க வீட்டுக்கு போ எதாவது பிரச்சனை குடுத்துகிட்டே இருக்காத என கதிர் திட்டுகிறார்.

பாண்டியன் வீட்டில் இருக்கும் மகன்களிடம் ஏன்டா சீக்கிரமா கடையில் இருந்து சொல்லாம  வந்துட்டீங்க யார் எல்லா வேலையும் செய்யறது என திட்டி கொண்டிருக்கிறார். அப்போது கோமதி இல்ல காலேஜுக்கு போன ராஜு இன்னும் வரல அதனாலதான் நான் அவங்களை வர சொன்னேன் என கூறுகிறார்.  அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே  ராஜியும்  கதிரும் வீட்டுக்கு வருகின்றனர்.

ரோகிணியின் குட்டு வெடித்தது ஜெயிலுக்குப் போகும் மனோஜ்..! மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..

அப்போது அவர்கள் வருவதைப் பார்த்த ராஜியின் பாட்டி ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் எவ்வளவு சூப்பரா இருக்கு. ஏன் தான் இவங்க அப்பனுங்க சண்டை போட்டுக்குறானுங்க என திட்டி விட்டு அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அதோட மட்டும் இல்லாமல் மருமகள்களை கூப்பிட்டு ஏன் பேத்தி புருஷனோட படத்துக்கு போயிட்டு வரா என கூறிவிட்டு, எப்ப தான் எனக்கு கொள்ளு பேர புள்ளைய பெத்து தருவாளோ என சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

வீட்டிற்கு போனதும் கோதை ராஜியை பார்த்து எங்க போன எங்க போனாலும் சொல்லிட்டு போக மாட்டியா என கேட்கிறார். அதற்கு ராஜியோ என்கிட்ட போன் இல்ல என கூற உன் பிரண்டு போன்ல இருந்து எங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல என கேட்கிறார் அதற்கு யார் நம்பரும் எனக்கு தெரியாது என சொல்கிறார். உடனே அரசியோ அண்ணன் நம்பர் கூடவா உங்களுக்கு தெரியாது என கேட்க,  எனக்கு ஞாபகம் இல்லை என கூறி விடுகிறாள்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

அடுத்த சீனில் கதிர்,  கோமதி மற்றும் மீனாவிடம் அவ எங்க போயிட்டு வந்து இருக்கான்னு கேளுங்க என சொல்ல நடந்த அனைத்தையும் ராஜி சொல்லுகிறாள். எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு அதனால தான் நான் இப்படி செஞ்சேன் என ராஜி சொல்ல கோமதி எனக்கு தெரியாதா எந்த தப்பும் செய்யாத என் மகன் அசிங்கப்படும்போது எனக்கு மட்டும் கஷ்டம் இருக்காதா நேத்து வந்த உனக்கு இப்படி இருக்குன்னா  எனக்கு எப்படி இருக்கும் என கூறிவிட்டு சென்று விடுகிறாள்.

அதனைத் தொடர்ந்து மீனா சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.அப்போது செந்தில் பேப்பரை தூக்கி அவள் மீது போட்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அதை கோமதியும் ராஜியும் பார்த்து விடுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.