விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஹோட்டலில் வந்து பிரச்சனை செய்த ரவுடியை கதிர் அடித்து விடுகிறார் அதனை மனதில் வைத்துக் கொண்டு கதிர் மற்றும் முல்லை ஹாஸ்பிடலுக்கு போகும்போது பணியாரம் சாப்பிடுகிறார்கள் அந்த சமயத்தில் கதிரிடம் வம்பு இழுத்த ரவுடி பைக்கால் மோதுகிறார். அப்பொழுது எதிர்பாராத விதமாக முல்லை கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது.
முல்லையை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார் கதிர் அவருக்கு செக் அப் செய்கிறார் டாக்டர் அப்பொழுது உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் ரத்தம் நிறையாக லாஸ் ஆகிவிட்டது அதனால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனவும் கூறுகிறார்கள் உடனே ஜீவா கண்ணன் என அனைவரும் ரத்தம் கொடுக்கிறார்கள். பிறகு ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும் என டாக்டர் கூற கதரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்.
அதற்குள் குடும்பமே நிலைகுலைந்து கண்ணீரில் மிதக்கிறது முல்லைக்கு என்ன ஆனது குழந்தை என்ன ஆனது என அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் சாப்பிடாமல் கூட அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதன் நிலையில் டாக்டர் வந்து ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் முல்லையும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.
இதனால் சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மிதக்கிறது முல்லை மற்றும் கதிர் எப்பொழுது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் இந்த நிலையை சமீபத்தில் ஒரு பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் டாக்டர் முல்லையை ஜெக்கப் செய்யப் போகிறார் அப்பொழுது முல்லை எப்பொழுது என்னுடைய குழந்தையை காட்டப் போகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.
உடனே டாக்டர் இதோ உன்னோட டிஸ்சார்ஜ் சம்மரி நீ இனிமே உன் குழந்தையை பார்க்கலாம் என குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரு நர்ஸ் வருகிறது. உடனே குழந்தையை முல்லை இடம் கொடுக்க கதிர் குழந்தையை தூக்கிப் பார்த்து உன்ன மாதிரியே குழந்தை இருக்கிறது என கூறுகிறார் உடனே முல்லையின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடுகிறது.
முல்லை கதிர் என அனைவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.