விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் சுவாரசியதிற்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், ஜெய கண்ணன் என நான்கு பேரும் பாண்டியன் ஸ்டோர் என்ற புகழ்பெற்ற மளிகை கடையை நடத்தி வருகிறார்கள். சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய மூன்று சகோதரர்களையும் கவனித்துக் கொள்ளப் போராடுகிறார். நான்கு பேரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் திடீரென ஏதேதோஏற்பட்டு நான்கு பேரும் பிரிந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ஜனார்த்தனன் ஜீவாவை பார்த்து நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தவரை சப்ளை பண்ண வேணாம்னு சொல்லிட்டியாமே என ஜனார்த்தனன் கூற உடனே ஜீவா அவர் அனுப்புன அரிசியில நிறைய கல்லு இருக்கு அதனால தான் வேணாம்னு சொன்னேன் என ஜீவா கூறுகிறார்.
இது மாதிரி ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிடுங்க மாப்பிள என ஜனார்த்தனன் கூறுகிறார் உடனே ஜீவா தன்னுடைய மனைவி மீனாவிடம் உங்க அப்பா மொத்த வியாபாரத்தையும் என்கிட்ட கொடுத்ததுக்கு அப்புறம் அவர் என்ன நம்பவே இல்லல்ல என மீனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் சுப்பையா அண்ணன போலீஸ் தேடிகிட்டு இருக்குதாமே நல்ல வேலை நாம தப்பிச்சோம் மாப்பிள்ளை என ஜீவாவிடம் ஜனார்த்தனன் கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்ல மாமா நமக்கு மசாலா சப்ளை பண்றாரு இல்ல என கூறும் பொழுதே உடனே ஜனார்த்தனன் ஒருத்தவன் தப்பு பண்ணிட்டான் என்பதால் அனைவரும் தப்பு பண்ணுவான் என்று நினைக்காதீர்கள் என ஜீவாவை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார் ஜனார்த்தனன்.
இனிமே எந்த முடிவை எடுத்தாலும் என்கிட்ட கலந்து கிட்டு அதுக்கப்புறம் முடிவெடுங்க மாப்பிள்ளை என மேலும் ஜீவாவை அசிங்கப்படுத்துகிறார் ஜனார்த்தனன். இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.