விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இப்பொழுது அவரை டிஸ் சார்ஸ் செய்ய வேண்டும் என நர்ஸ் கூறுகிறார், அதற்கு பணம் ரெடி பண்ண கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பணம் எடுக்க போன கண்ணன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை, அதனால் ஐஸ்வர்யாவின் சித்தி கதிர் முன்னாடியே பணம் கட்ட முடியாமல் உன்னை அப்படியே விட்டுட்டு ஓடிட்டான் என ஏளனமாக பேசுகிறார். உடனே கதிர் நீங்க சும்மா இருங்க அக்கா அவன் வந்துருவான் எனக் கூறுகிறார்.
ஆனாலும் ஐஸ்வர்யா சித்தி சும்மா இல்லாமல் பணத்தை மூட்டை மூட்டையை கட்டி தூக்க முடியாம தூக்கிட்டு வரனோ. ஒரு நாள் ஹாஸ்பிடல் செலவு தானா அது அவனால கட்ட முடியலையா அதை எடுத்துக்கிட்டு வர இவ்வளவு நேரமா என இன்னும் கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே கதிர் ரிசப்ஷன் சென்று ஐஸ்வர்யாவுக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ரிசப்ஷனில் மொத்தமாக 9,100 கட்ட வேண்டும் என கூறுகிறார்.
உடனே கதிர் ஹோட்டலுக்கு செல்கிறார் அங்கு சப்ளை செய்துவிட்டு கல்லாவில் இருந்த மொத்த காசையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய மாமனாரிடம் செலவுக்காக அனைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டேன் எனக் கூறிவிட்டு ஹாஸ்பிடல் செல்கிறார். அங்கு சென்று
ஐஸ்வர்யாவுக்கு தேவையான அனைத்து பணத்தையும் ஹாஸ்பிடலில் கட்டி விடுகிறார். அந்த நேரத்தில் கண்ணன் ஹாஸ்பிடலுக்கு வருகிறார் அப்பொழுது கண்ணன் பில்லு கட்ட பணம் எடுக்க வீட்டிற்கு போனேன் ஆனா அங்க பணம் இல்லை என கண் கலங்குகிறார்.
உடனே கதிர் அதுக்கு ஏன்டா இப்படி இருக்க பில்லெல்லாம் கட்டியாச்சு முதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு ரெடி பண்ணு என கூறுகிறார் நானே கொண்டாந்து விடுகிறேன் என கதிர் தன்னுடைய காரிலேயே அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற அனைவரும் உடனே கதிர் ஐஸ்வர்யாவை நீ ஏன் இங்க உட்கார்ந்து இருக்க போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என கூறுகிறார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி போய் காபி வாங்கிட்டு வர வேண்டியதுதானே கண்ணன் எனக் கூற உடனே காபி வாங்க கண்ணன் செல்கிறார் அங்கு இருந்த சில்லறை காசை ஒன்று ஒன்றாக பொறுக்குகிறார் அதை பார்த்த கதிர் வருத்தப்படுகிறார்.
இவ்வளவு நடந்தும் திருந்தாத ஐஸ்வர்யா கதிர் முன்பே வீடியோ எடுத்து யூடியூபில் போட பார்க்கிறார் அதற்கு கதிர் இதெல்லாம் எனக்கு பிடிக்காது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது என கூறுகிறார். பிறகு கண்ணன் அண்ணா நீ வந்தது நல்லதா போச்சு இல்லன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் என கூறுகிறார். கண்ணனிடம் காசு இருக்கா என கேட்டுவிட்டு உடனே கதிர் கண்ணனிடம் காசை கொடுத்து விட்டு செல்கிறார் கதிர் தன்னுடைய மனைவியிடம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா தன்னுடைய சித்தியை சமைக்க கூறுகிறார் அப்பொழுது கடையில் வாங்கலாமா என கூற அவளுக்கே உடம்பு சரியில்ல அவ எப்படி கடையில் சாப்பிடுவார் என கண்ணன் கூர வேணா சித்தி நல்லா சமைப்பாங்க என ஐஸ்வர்யா கூறுகிறார். உடனே அவரின் சித்தி நக்கலாக எந்த ஆட்டை பிடித்து வெட்டட்டும் எனக் கூற கண்ணன் கறி வாங்க கிளம்புகிறார் உடனே சித்தி சமைக்க தேவையான பொருளை கண்ணனிடம் கூற ஒரு கிலோ கறியும் கூறுகிறார். கண்ணன் ஒரு கிலோ வேணுமா என அதிர்ச்சி அடைகிறார். கண்ணன் கறி எடுக்க செல்கிறார் அங்கு மட்டன் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் எனக் கூற அதிர்ச்சி அடைகிறார் கண்ணன்.
கறி வாங்க சென்ற இடத்திலும் கண்ணன் அசிங்கப்பட்டு நிற்கிறார் பணமில்லாமல் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.