பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.அந்த வகையில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதோட இந்த சீரியலில் கதிர்,முல்லை, தனம், மூர்த்தி, ஜீவா ஆகிய கேரக்டரில் நடித்து வரும் குமரன், காவியா, சுஜிதா, ஸ்டாலின் ஆகியோர் தங்களது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.
அந்தவகையில் சுஜிதா வெள்ளித்திரையிலும் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். பிறகு சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு தற்பொழுது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.
இவரைத் தொடர்ந்து ஸ்டாலினும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது குமரன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த சீரியல் மற்ற சீரியல்களை விடுவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பல திருப்பங்களுடன் இருக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் சில தினங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
எனவே நான்கு அண்ணன் தம்பிகளான கதிர், ஜீவா,கண்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் குழந்தைகளாக மாற உள்ளார்கள். எனவே இவர்களின் கேரக்டரில் நடிக்க வைப்பதற்காக நான்கு சுட்டி குழந்தைகளை அறிமுகபடுத்த உள்ளார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி மற்றும் சிவா அவர்களின் மகனாக நடித்துவரும் பையன் உட்பட இன்னும் சில குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்கள் இவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.