ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதலிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சீரியல்கள் மற்றும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கலை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக படத்தின் பெயர்களில் சீரியல்களை ஒளிபரப்புவதும் படத்தை போல் சீரியல்களை சுவாரசியமாக கொண்டு செல்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும். பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் திடீரென இந்தக் கூட்டுக்குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது அதாவது தேன் கூட்டில் கல்லை எரிந்தது போல் கூட்டுக் குடும்பத்தின் மீது யார் கண்ணு பட்டது என்று தெரியவில்லை திடீரென கூட்டுக்குடும்பம் உடைந்து விட்டது. இந்த பிரச்சனை மீனாவின் தங்கை கல்யாணத்தில் தான் ஆரம்பமானது.
மொய் எழுதும் பொழுது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியாக பெயர் வந்ததால் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீவா சண்டை போட்டு வீட்டு மாமியார் வீட்டிலேயே இனி இருக்கப் போவதாக கூறி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் கண்ணன் ஐஸ்வர்யாவும் சண்டை போட்டுவிட்டு சென்று விட்டார்கள் இப்படி சீரியல் மிகவும் சீரியஸாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த சீரியல் சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மீனா தங்கையின் திருமண சூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்துள்ள காரியம் மிகவும் வைரல் ஆகி வருகிறது கல்யாண சூட்டிங் நடந்த பொழுது மாப்பிள்ளை கழுத்தில் அவர் தாலி கட்டி இருக்கிறார் அதன்பின் அந்த தாலியை அவிழ்த்து பெண் கழுத்திலும் கட்டுகிறார் மணப்பெண் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி நான் ஜீவாவுக்கு பொண்டாட்டி நான் இவளுக்கும் தாலி கட்டி விட்டேன் அதனால் இவரும் ஜீவாவுக்கு பொண்டாட்டி தான் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023