விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக கதிராக அறிமுகமாகி ஜோடி டான்ஸ் ஷோ மூலமாக தனது தனித்திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் குமரன்.
குமரன் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு மிகச் சிறந்த டான்ஸர் என்பதை நிரூபித்தது டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக தான்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குமரன் மற்றும் சித்ராவின் ஜோடியை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த சீரியலை பார்த்தவர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் அதில் குமரன் மற்றும் சித்ரா நடிக்கும் அனைத்து சீன்களையும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் சாக கூட வைத்து வந்தார்கள்.
குமரன் டான்ஸ் ஜோடி ஷோ மூலம் சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்தார். இதனைப் பார்த்த பல ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு திறமை உள்ளதா என்று அனைவரும் பாராட்டினார்கள்.
இவர் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு முன்பே மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார்.
இந்நிலையில் ரீசண்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமரன் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அதில் சில ரசிகர்கள் குமரன் எங்கு போனார் இனிமேல் குமரனும் இந்த சீரியலில் நடிக்க மாட்டாரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தற்பொழுது குமரன் பெங்களூரில் பட சூட்டிங்கில் உள்ளார். அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அந்த ஷூட்டிங்கிற்காக பெங்களூர் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.