விஜய் டிவியில் தற்பொழுது பல சீரியல்கள் ரசிகர்களை கவரும் அளவிற்கு இயக்கி வருகிறார்கள். அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் தமிழில் மாபெரும் ஆதரவையும், வெற்றியும் பெற்றதால் இன்னும் சில மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணம் கதிர் மற்றும் முல்லை கேரக்டர் தான் இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.இவ்வாறு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த சீரியலில் திடீரென்று சித்ரா தற்கொலை செய்து இருந்ததால் இவருக்கு பதிலாக விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்த காவியா தற்பொழுது முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவரும் சித்ராவின் இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் போய்க் கொண்டிருந்த சீரியலில் தற்பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.இவர் இந்த சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவர் இந்த சீரியலில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இந்த சீன் நாளை வெளியாகும்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.