விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் TRP- யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த சீரியல் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கதிர் முல்லை கேரக்டர் தான்.இவர்களின் ஆன் ஸ்கிரீன் லவ் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் குமரன் மற்றும் சித்ரா இருவரும் நடித்து வந்தார்கள். சித்ராவின் இறப்பிற்குப் பிறகு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணியாக நடித்து வந்த காவியா முல்லை கதாபாத்திரதில் நடித்து வருகிறார்.
இவரும் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் சித்ரா இல்லாத குறையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்பொழுது காவியா மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.