Serial actor pandiyan store kathir vathi comming dance video viral:சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளி பரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் மக்களை மட்டும் பொதுவாக கவராமல் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மிக சிறப்பாக போய் கொண்டிருப்பதற்கு முல்லை, கதிர் தான் காரணம் இந்த சீரியலின் மையப்புள்ளியாக விளங்குகிறார்கள். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்பொழுது கொரோனா உலகையே ஆட்கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முடங்கியுள்ள பிரபலங்கள் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க வீட்டு வேலை செய்வது, விழிப்புணர்வு வீடியோ, நடனம் மற்றும் பாடுவது போன்ற பலவற்றை செய்து வருகின்றனர் .
அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர் குமரன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அவருடைய ஸ்டைலில் மிரட்டலான ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ.
#serial #actor #VijayTV pic.twitter.com/tGs2RUoR7Z
— Tamil360Newz (@tamil360newz) April 14, 2020